கொழும்பில் நங்கூரமிட்டது சீன கப்பல் - தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு
Sri Lanka
China
Sri Lanka Fisherman
China Ship In Sri Lanka
By Sumithiran
சுப்பர் ஈஸ்டர்ன் என்ற சீனாவின் எண்ணெய் கப்பல், கொழும்பு துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்ததாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
டீசல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 10.6 மில்லியன் லீற்றர் டீசலை தரையிறக்கும் பணி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக விநியோகம்

மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சிடம் டீசல் ஒப்படைக்கப்பட்டு, தேவைப்படும் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உடனடியாக விநியோகிக்கப்படும் எனவும் தூதரகம் அறிவித்துள்ளது.
நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சீனாவினால் 9,000 மெட்ரிக் தொன் டீசல் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இம்மாதத்திலும் டிசம்பரிலும் குறித்த டீசல் தொகை நாட்டை வந்தடையவுள்ளதாக சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி