சீனாவின் நெடுநாள் திட்டம்! அம்பலப்படுத்தினார் விஜயதாஸ ராஜபக்ஷ

colombo sri lanka china
By Vanan Apr 15, 2021 04:38 PM GMT
Report

சீனாவின் நெடுநாள் திட்டம் தற்போது வெளிப்பட்டுள்ளது என முன்னாள் நீதியமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

தனி நாடாக அங்கீகரிக்கும் அனைத்து அம்சங்களையும் கொழும்பு துறைமுக நகரம் கொண்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு நீதிமன்ற கட்டமைப்புக்கும், இலங்கையின் ஆட்புல எல்லைக்கும் முரணாக காணப்படுகிறது.

இலங்கையின் தலைநகருக்கும், மேல்மாகாணத்திற்கும் சவால் விடுக்கும் வகையில் இந்த துறைமுக நகரம் காணப்படுகிறது.

நாடு இன்று பல்துறையில் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி, எல்லை கடந்த அரசமுறை, கடன் நெருக்கடி, சுகாதாரமற்ற உணவுப் பயன்பாடு என பலதரப்பட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.

பொருளாதார மட்டத்தில் இலங்கை அச்சுறுத்தலான தன்மையினை நோக்கி நகர்கின்றது என்பதை குறிப்பிட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட முறையற்ற அரசமுறை கடன்களினால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒப்பந்த அடிப்படையில் விற்க நேரிட்டது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சீனாவிற்கு வழங்குவதற்கு அக்காலக்கட்டத்தில் அமைச்சரவையிலும், நாடாளுமன்றிலும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். இதனால் அப்போது வகித்த நீதியமைச்சர் பதவி மாத்திரம் பறிபோனது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளை அரச தலைவர்கள் இன்று அனுபவ ரீதியில் உணர்ந்துக் கொண்டுள்ளார்கள்.

ஏனையோரைக் காட்டிலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் பாடம் புகட்டியுள்ளார்கள்.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கியதால் ஏற்பட்ட விளைவுகளை காட்டிலும் பன்மடங்கு விளைவு கொழும்பு துறைமுக பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தினால் ஏற்படும்.

இலங்கையின் ஆட்புல மற்றும் கடல் எல்லை ஆகியவை அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

மேல்மாகாணத்தில் காலி முகத்திடலில் ஒரு 644 ஹெக்டயார் கடற்பரப்பு மணலால் நிரப்பப்பட்டு கொழும்பு துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டது. இந்நிலப்பரப்பினை இலங்கையின் மொத்த பரப்பளவிற்குள் உள்வாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஆனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விசேட ஆணைக்குழு கொழும்பு துறைமுகத்தை தனித்த ஒரு பகுதியாக காண்பித்துள்ளது என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்