இலங்கையில் சீன பொறியியலாளரின் செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை
இலங்கை (sri lanka)வெல்லம்பிட்டிய, பிரந்தியாவத்த பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சீனப் (china)பிரஜை ஒருவர் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டி காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெல்லம்பிட்டி காவல்துறையினரும் சிறப்புப் படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரான சீனப் பிரஜை கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோத மதுபானங்கள்
சம்பந்தப்பட்ட சீன நாட்டவர் 318,000 மில்லிலீட்டர் கோடா மற்றும் 67,500 மில்லிலீட்டர் சட்டவிரோத மதுபானங்களை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சீன சந்தேக நபர் தாமரை கோபுர திட்டத்தில் பொறியியலாளராகப் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
வெல்லம்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட சீன பிரஜை அளுத்கடே இலக்கம் இரண்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)