வெளிநாட்டு நிதியுதவியுடன் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வீடு!
சீன அரசின் நிதியுதவின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கு 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கு சீன அரசின் நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணித்தல், 03 தொகுதியின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சீன அரசால் பெயர் குறித்துரைக்கப்பட்டுள்ள விலைமனுதாரர்கள் 08 பேரிடம் விலைமனுக்கள் கோரப்பட்டன.
ஒப்பந்தம்
அந்த விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய ஒப்பந்தங்களை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன் படி, தொகுதி 01 மொரட்டுவ 575 வீட்டு அலகுகள் மற்றும் கொட்டாவ 108 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் M/s China Railway 25th Burean Group Co.Ltd இற்கும்,
தொகுதி 02 தெமட்டகொட 586 வீட்டு அலகுகள் மற்றும் மஹரகம் 112 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் M/s China Harbor Engineering Company Ltd இற்கும்,
தொகுதி 03 பேலியகொட 615 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் M/s Shanxi Construction Investment Group Co.Ltd இற்கும் ஒப்பந்தங்களை வழங்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த முன்மொழிவானது, கிராமிய, நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் கட்டுமானங்கள் அமைச்சர் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |