இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தம்! விஜித ஹேரத்
இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் கருதுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(06.11.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம்
“புதிய நாடாளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டவுடன் மேற்படி சட்டமூலத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தங்கள் தேவையா அல்லது புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமா என்பது குறித்தும் தீர்மானிக்கப்படும்.
கடந்த வருடம்(2023) செப்டம்பர் மாதம் இலங்கை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலம், ஜனவரி 2024 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
பெரும்பான்மையான எம்.பி.க்கள் சட்டமூலத்தை ஆதரித்தனர், அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்துடன் ஒத்துப்போகவில்லை என்று கூறின.
அதன்பிறகு, இலங்கையின் உச்ச நீதிமன்றம், பல இணையவழி பாதுகாப்பு சட்டமூல விதிகள் அரசியலமைப்புடன் ஒத்துப்போகவில்லை என்று தீர்மானித்தது.
இந்நிலையில், கடந்த வருடம்(2023) நவம்பர் 07ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட தீர்மானங்களின்படி இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |