11 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் வந்த சீன பிரதமர் : பாடசாலைகள், வணிக நிறுவனங்கள் பூட்டு
Pakistan
China
By Sumithiran
பாகிஸ்தான்(pakistan) தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீன(china) பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு நடைபெறுவதால் அந்நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனப் பிரதமர் லீ கியான் இன்று(14) பாகிஸ்தான் வந்தடைந்தார்.
இஸ்லாமாபாத் நகருக்கு மூன்று நாட்கள் பொது விடுமுறை
11 ஆண்டுகளுக்குப் பிறகு சீனப் பிரதமர் ஒருவர் பாகிஸ்தானுக்கு வந்திருப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இஸ்லாமாபாத் நகருக்கு மூன்று நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாநாட்டையொட்டி நகரில் உள்ள பாடசாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும், நகரின் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி