பட்டினியில் கதற போகும் காசா: இஸ்ரேலின் கொடூர திட்டம்
காசா (Gaza) பகுதியில் இஸ்ரேலின் (Israel) தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் காசாவிற்குள் செல்லும் அத்தியாவசிய பொருட்களையும் தடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் (Hamas) இடையே ஓராண்டிற்கு மேல் போர் தொடரும் நிலையில், சமீப காலங்களில் காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வடக்கு காசாவின் ஜபாலியாவில் (Jabalia) தங்கள் இராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கை
அந்த பகுதியில் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்ததன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் தெற்கு நோக்கி நகருமாறு இஸ்ரேல் இராணுவம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், வடக்கு காசாவின் ஜபாலியாவில் பகுதியை முழுமையாகச் சுற்றி வளைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு, முழுமையாகச் சுற்றி வளைத்து உணவு மற்றும் தண்ணீரின்றி அங்குள்ள ஹமாஸ் போராளிகளை முடக்குவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவி
அதேநேரம் இப்படி அனைத்து மனிதாபிமான உதவிகளையும் முடக்குவது அங்குள்ள பல நூறு அப்பாவி பலஸ்தீனியர்களையும் பாதிக்கும் என்பதால் இது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் ஓய்வுபெற்ற தளபதிகள் சிலர் இணைந்து இந்த திட்டத்தை நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளனர்.
இராணுவ மண்டலம்
அதன்படி வடக்கு காசா பகுதியில் வசிக்கும் பலஸ்தீனியர்கள் பாதுகாப்பாக வெளியேற ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகு அந்த பகுதி மூடப்பட்டு இராணுவ மண்டலமாக அறிவிக்கப்படும்.
மேலும் ஒரு வாரம் கழித்தும் வெளியேறாதவர்கள் அனைவரும் ஹமாஸ் படைகளாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு , உணவு, தண்ணீர், மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பொருட்கள் நிறுத்தப்படும்.
மேலும், இராணுவ விதிமுறைகளுக்கு உட்பட்ட அவர்கள் மீது தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |