கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையுடன் இலங்கை வருகிறது சீனக் கப்பல்...! கடும் எச்சரிக்கை விடுத்த இந்தியா

Sri Lanka China India China Ship In Sri Lanka
By Kiruththikan Aug 11, 2022 08:27 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

யுவான் வாங் - 5 

சீனாவின் இந்த கப்பல் ஆராய்ச்சி கப்பல் என அடையாளப்படுத்தப்பட்டாலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பெலஸ்டி ஏவுகணை மற்றும் செய்திமதிகளை ஏவுதல், கண்காணித்தல் ஆகிய வசதிகள் இருப்பதன் காரணமாக தமது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கலாம் இந்தியா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், சீன கப்பல் தமது துறைமுகத்திற்கு பிரவேசிப்பது தொடர்பில் இதுவரை எந்தவித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

யுவான் வாங் - 5 கப்பல் நாட்டிற்கு பிரவேசிப்பது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரி இவ்வாறு தெரிவித்தார். 

மேலும், ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் மூலமே அது தொடர்பில் தாம் அறிந்து கொண்டதாக குறிப்பிட்டார்.

நாட்டிற்கு கப்பல் ஒன்று பிரவேசிக்குமாயின் அதற்கான அனுமதி கோரப்பட்டிருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ள சீன கப்பல்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையுடன் இலங்கை வருகிறது சீனக் கப்பல்...! கடும் எச்சரிக்கை விடுத்த இந்தியா | Chinese Spy Ship Yuan Wang 5 Lanka Indian Warns

சீனாவின் யுவான் வாங் - 5 கப்பலின் வருகையை பிற்போடுமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்தக் கப்பல் இலங்கையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு வரவுள்ள குறித்த கப்பல், இந்தோனேஷிய கடற்பரப்புக்கு அப்பால், இலங்கைக்கு தென்மேற்காக, 680 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பல், இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், சீன தயாரிப்பிலான பாகிஸ்தான் போர்க் கப்பல் ஒன்றும் நாளைய தினம் இலங்கையை வந்தடையவுள்ளது.

'யுவான் வாங்-5 என்ற சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆய்வுக் கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதற்கான, இலங்கையின்  அனுமதி, கடந்த மாதம் 12 ஆம் கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு, வெளிவிவகார அமைச்சால் வழங்கப்பட்டது.

11ஆம் திகதி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை முறைமுகத்தில் தரித்திருப்பதற்கும் முன்னதாக அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளை சுட்டிக்காட்டிய இந்தியாவின் கடும் அதிருப்தியின் காரணமாக, இலங்கையின் வெளி விவகார அமைச்சு, கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு அனுப்பி வைத்திருந்த செய்திக் குறிப்பில், மேலும் ஆலோசனை செய்யப்படும் வரை யுவான் வாங் 5 கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை ஒத்திவைக்குமாறு கோரியிருந்தது.

மூன்றாம் தரப்பினரை இலக்கு வைத்தது அல்ல

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையுடன் இலங்கை வருகிறது சீனக் கப்பல்...! கடும் எச்சரிக்கை விடுத்த இந்தியா | Chinese Spy Ship Yuan Wang 5 Lanka Indian Warns

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான தொடர்பு சுதந்திரமானதே தவிர, மூன்றாம் தரப்பினரை இலக்கு வைத்தது அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

தங்களது ஆய்வு கப்பல் இலங்கையில் நங்கூரமிடுதல் மூன்றாம் தரப்பை இலக்கு வைத்தது அல்ல சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் தெரிவித்திருந்தார். இதேவேளை, சீன தயாரிப்பிலான பாகிஸ்தான் போர்க் கப்பல் ஒன்று நாளை மறுதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த கப்பல் பங்களாதேஷ் சிட்டகொங் துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருந்தது எனினும், அந்த அனுமதியை டாக்கா அதிகாரிகள் நிராகரித்திருந்தனர்.

இந்தநிலையில், பாகிஸ்தான் நோக்கி பயணிக்கும் குறித்த கப்பல் இடைநடுவே கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.


YOU MAY LIKE THIS 


ReeCha
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025