யுவான் வாங் 'ஒபரேஷன் காட்டுப்பூனை'..! இலங்கையில் சீன கடற்படை தளம்! இந்தியாவுக்கு உரத்த செய்தி
இலங்கைக்கு வந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நின்ற சீனாவின் உளவுக்கப்பலான யுவான் வாங் - 5 பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நின்ற சீனாவின் உளவுக் கப்பலால் இந்தியாவின் தொலைத் தொடர்பு பரிவர்த்தனை கட்டமைப்புகளை ஒட்டுக் கேட்க முடியும் என்றும், தொலைதூர ஏவுகணைகளை இடைமறிப்பதற்கு அல்லது வழிநடத்துவதற்கு அந்தக் கப்பலில் உள்ள தொழில்நுட்பத்தால் முடியும் என்றும் கூறப்பட்டு சீனாவின் அந்தக் கப்பல் இலங்கையின் தரித்து நிற்பதை இந்தியா கடுமையாக எதிர்த்தது.
ஆனாலும் திட்டமிட்டபடி சீனா அந்தக் கப்பலை நகர்த்தி என்ன நோக்கத்திற்காக அந்த நடவடிக்கையில் இறங்கியதோ அந்த நோக்கத்தை அது நிறைவேற்றி இருக்கிறது.
யுவான் வாங்கின் 'ஒபரேஷன் காட்டுப்பூனை'
சிறிலங்காவில் பூதாகரமாக வெடித்த விவகாரம்..! நாட்டைவிட்டு வெளியேறியது சீன கப்பல் |
இது ஒருபுறமிருக்க, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் திகதி இந்திய முப்படைகளின் பிரதம தளபதியான ஜெனரல் பிபின் ராபத் பயணம் செய்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளாகி முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராபதட உட்பட 12 பேர் பலியாகி இருந்தார்கள்.
சீரற்ற காலநிலை காரணமாகவே அந்த உலங்குவானுர்தி விபத்து நடந்தது என்று கூறப்பட்ட போதிலும் சீனாவின் சதிச் செயல்களின் காரணமாகவே அந்த விபத்து நடைபெற்றதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி இருந்தனர்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி அந்தக் குற்றச்சாட்டை பகிரங்கமாகவே முன்வைத்திருந்தார்.
“யுவான் வாங்” மீறப்பட்டால் சகித்துக்கொள்ள மாட்டோம்..! சீனாவின் பகிரங்க அறிவிப்பு |
இந்தியாவை உலுக்கிய விபத்துச் சம்பவம்
குன்னூரில் இடம்பெற்றது விபத்து அல்ல என்றும், அது திட்டமிட்ட சதி என்றும் குறிப்பிட்ட சுப்பிரமணியன் சுவாமி அந்தச் சதியின் பின்னணியில் சீனாவின் கரங்கள் இருந்தன என்றும் தெரிவித்திருந்தார்.
சைபர் தாக்குதல்கள் மூலம் பறக்கும் விமானங்களை தொலைதூரத்தில் இருந்து வேறு நபர்களால் கட்டுப்படுத்தி விபத்துக்கு உட்படுத்த முடியும் என்று அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு பிரிவு ஒப்புக்கொண்டதை ஆதாரமாகக்காட்டி இந்தியாவின் முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராபத் பயணம் செய்த அந்த உலங்குவானூர்தி ஹக் செய்யப்பட்டு விபத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டிருந்தார்கள் பல போரியல் ஆய்வாளர்கள்.
இதே போன்றதொரு சம்பவம் தாய்வானிலும் இடம்பெற்றுள்ளதுடன், அந்தச் சம்பவத்திற்கும் சீனாவே காரணம் என்றும் கூறப்பட்டிருந்தது.
இவ்வாறு பல சர்ச்சைகளை ஏற்படுத்திய சீனாவின் நகர்வு குறித்தும், பிராந்திய அரசியலில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி விட்டுள்ள சீனாவின் யுவான் வாங் - 5 எனும் உளவுக் கப்பல் பற்றி வெளியாகி வருகின்ற சில ஆச்சரியமான தகவல்களைத் தான் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் நாம் பார்க்க இருக்கின்றோம்.
சீனாவின் பெரும் திட்டம்! யுவான் வாங்கை அடுத்து ஜிபூட்டி - இந்தியாவுக்கு அதிர்வு |

