“யுவான் வாங்” மீறப்பட்டால் சகித்துக்கொள்ள மாட்டோம்..! சீனாவின் பகிரங்க அறிவிப்பு
இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒருமைப்பாடு மீறப்படுவதை சீனா எந்தச் சந்தர்ப்பத்திலும் சகித்துக்கொள்ளாது என இலங்கைக்கான சீன தூதுவர் ஸி ஸென்ஹொங் தெரிவித்துள்ளார்.
'ஒரு சீன கொள்கை முதல், யுவான் வாங் - 5 வரை' கரம் கோர்ப்போம், நமது இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாப்போம் என்ற தலைப்பில் சீன தூதுவரால் இன்று விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவான் வாங் - 5 கப்பல் விவகாரம், சீனா மற்றும் இலங்கையால் முறையாக தீர்க்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் இறைமை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு என்பவற்றை பாதுகாக்க, சர்வதேச தளத்தில் சீனா எப்போதும் இலங்கையை ஆதரிக்கிறது.
இது, இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், சர்வதேச நியாயத்தையும், நீதியையும் மீண்டும் பாதுகாப்பதாகவும் அது தொடரும் என சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் பூதாகரமாக வெடித்த விவகாரம்..! நாட்டைவிட்டு வெளியேறியது சீன கப்பல் |
இந்தியா, சீனா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையேயான பூசல்
இது ஒருபுமிருக்க, இலங்கையில் சீனாவின் இந்த உளவுக் கப்பல் வருகை தொடர்பாக இந்தியா, சீனா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையே பூசல் நிலவியது.
சீனாவின் உளவுக் கப்பலான யுவான் வாங் - 05 என்ற கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதாக கடந்த மாத இறுதியில் தகவல் வெளியானது.
இந்த உளவுக் கப்பலின் வருகை என்பது இந்திய எல்லைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என இந்தியா இலங்கையிடம் கூறி கப்பல் வருகையை தடுக்கும் முயற்சியில் களமிறங்கியது.
இந்தியாவின் அழுத்தத்தை ஏற்ற இலங்கை வெளியுறவு அமைச்சு சீனாவைத் தொடர்பு கொண்டு உளவுக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தியது.
சீனாவின் பெரும் திட்டம்! யுவான் வாங்கை அடுத்து ஜிபூட்டி - இந்தியாவுக்கு அதிர்வு |
தேவையில்லாமல் தலையிட வேண்டாம் - இந்தியாவுக்கு சீனாவின் பதில்
இந்தியாவின் இந்தச் செயலுக்கு சீனா கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இலங்கை என்பது இறையாண்மை கொண்ட நாடு. அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா தேவையில்லாமல் தலையிடுவது முறையல்ல. இலங்கை - சீனா உறவில் மூன்றாம் தரப்பு தலையிடுவது தேவையற்ற ஒன்று. அணி சேராக் கொள்கையின் படி இலங்கை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த நாட்டுடனும் உறவு வைத்திருக்கலாம். எனவே, உளவுக் கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், சீனா தான் திட்டமிட்டபடி, உளவுக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அனுப்பி வைத்தது. இங்கு எரிபொருளை நிரப்பிய பின்னர் கடந்த 22ஆம் திகதி ஹம்பாந்தோட்டை அன்று துறைமுகத்தை விட்டு கப்பல் புறப்பட்டது.
சீன உளவுக் கப்பலின் நகர்வை இந்தியா கூர்ந்து கவனித்து வந்த நிலையில், அதன் கட்டமைப்புகள் மீது 3 செய்மதிகள் மூலம் தடையேற்படுத்தப்பட்டதாக இந்தியா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சீன ஆய்வுக் கப்பலின் இலங்கை நுழைவு! இந்தியா பதிலடி |