ஒரு கையுடன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ்
இந்திய அணிக்கு எதிரான 5 ஆவதும் இறுதியிமான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தின் சகலதுரை வீரர் கிர்ஸ் வோக்ஸ் ஒற்றைக்கையால் துடுப்படுத்தாட்ட களத்திற்குள் நுழைந்தமை அதிக பாராட்டுக்களை பெற்றுள்ளது.
அணியின் வெற்றிக்காக இடது கையில் ஏற்பட்ட உபாதையையும் பெருட்படுத்தாது கிர்ஸ் வோக்ஸ் போட்டியில் களமிறங்கியிருந்தார்.
எனினும் அவரது முயற்சிக்கு மத்தியிலும், குறித்த போட்டியில் இந்தியா தனது பந்துவீச்சின் சாமர்த்தியத்தால் இங்கிலாந்து அணியை 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
கைதட்டி வரவேற்றபு
குறித்த போட்டியில் வோக்ஸ் களத்துக்குள் நுழைந்தபோது ரசிகர்கள் அனைவரும் அவரை கைதட்டி வரவேற்றிருந்தனர்.
முதல் நாளில் களத்தடுப்பில் ஏற்பட்ட உபாதையில் அவரது தோள்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டது, இதனால் அவர் துடுப்பெடுத்தாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் இங்கிலாந்து அணியினர் பதட்டமான வெற்றியை நோக்கி நகர்ந்த போது வோக்ஸ் துணிச்சலுடன் களமிறங்கியிருந்தார்.
Christopher Roger Woakes ❤️ pic.twitter.com/np2G5JIiJj
— England Cricket (@englandcricket) August 4, 2025
இடது கையை தனது ஆடைக்குள் வைத்துக்கொண்டு, அசையாமல், வலது கையை மட்டும் பயன்படுத்தி அவர் ஆடுகளம் நுழைந்தார்.
அவரது உறுதிப்பாடு சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது. மேலும் அவர் ஆடுகளத்தில் இருந்தது தொடரின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக மாறியது.
