நத்தார் தினத்தில் கொழும்பு பேராயர் விடுத்துள்ள வேண்டுகோள்!
#Christmas #Corona Virus #Colombo #Sri Lanka
By Vasanth
கொரோன வைரஸ் எவ்வாறு உருவானது என்பதை கண்டுபிடித்து உறுதி செய்வதற்காக உரிய விசாரணைகள் இடம்பெறவேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கந்தானை சென் செபஸ்டியன் தேவாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கிறிஸ்மஸ் ஆராதனையின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் உலகலாவிய தொற்று தானாக உருவானது என மக்கள் கருதமுடியாது.
அதிகாரத்தில் உள்ளவர்கள் சூழலை அளிப்பதும் மோசமான வறுமையும் கரிசனைக்குரிய விடயங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளம் என்பது சமூகத்தின் சிறிய குழுவினரின் கரங்களிலேயே காணப்படுகின்றது எனவும், கொரோனா வைரஸ் வறிய மக்களை மோசமாக பாதித்துள்ளது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்