வடக்கு கடற்றொழிலாளர்கள் மீது கழுகுப் பார்வையுடன் அரச புலனாய்வாளர்கள்!
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து கடலோர பிரதேசங்களில் புலனாய்வு அதிகாரிகள் அதிக அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, குறித்த பிரதேசங்களில் சேவையில் உள்ள அரச புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், இராணுவ புலனாய்வு அதிகாரிகள் உட்பட அந்தந்த பிரதேசங்களுக்கான காவல்துறை அதிகாரிகளும் கடற்றொழிலாளர்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
கடற்றொழிலாளர்கள்
இலங்கை கடற்பரப்பிற்கு வருகைத்ததரும் கப்பல்கள் மூலம் கரைக்கு போதைப்பொருளை கடத்தும் கடற்றொழிலாளர்கள் தொடர்பில் தொடர்ந்தும் தகவல்கள் வெளியாகி வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், படகு உரிமையாளர்கள் பலரும் இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், அண்மையில் தெற்கு கடற்பரப்பில் பாரியளவு போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |