நீர்கொழும்பு சிறை மோதல்! 150 கைதிகள் உட்பட பலரிடம் வாக்குமூலம் பதிவு
நீர்கொழும்பு சிறை மோதல் தொடர்பான விசாரணைகள் தொடரும் நிலையில், கைதிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைக் கைதிகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் இன்று(13) முதல் இணையவழியில் நடத்தப்படும் என சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறையில் முதலில் சுமார் 2,400 கைதிகள் இருந்த நிலையில், சமீபத்திய மோதலைத் தொடர்ந்து, ஏராளமான கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை சம்பவம்
அதன்படி, தற்போது சுமார் 600 கைதிகள் மட்டுமே அங்கு இருப்பதாகவும், அவர்களும் வரும் நாட்களில் மற்ற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீதமுள்ள கைதிகளை உறவினர்கள் சந்திக்கவும் தற்போது அனுமதிக்கப்படவில்லை என்றும் திணைக்களம் கூறியுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கும் இடையே சமீபத்தில் நடந்த மோதலில் எட்டு சிறைச்சாலை அதிகாரிகளும் 21 கைதிகளும் உயிரிழந்ததுடன், சுமார் 100 பேர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |