ரணிலின் வீட்டிற்கே சென்ற சிஐடியினர்! பதறிப்போன வஜிர அபேவர்தன
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களம் அவரது இல்லத்திற்கு சென்றமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மைத்திரி விக்ரமசிங்கவும் ரணில் விக்ரமசிங்கவும் உடல்நலம் குன்றியிருக்கும் நேரத்தில் வெளியாட்கள் இல்லத்திற்குச் செல்வது அவர்களின் உடல் நலத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாகும் என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மைத்திரி விக்ரமசிங்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற்றது தொடர்பாக கொழும்பில் ஊடகங்களுக்கு அறிக்கை அளித்தபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ரணில் மீதான வழக்கு
16.6 மில்லியன் ரூபாய் மதிப்பிலான பொது நிதியைத் தனது தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்திற்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க மீது தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக மைத்திரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்