அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கை
srilanka
corona
By Independent Writer
பாடசாலை சிற்றுண்டிச்சாலை எவ்வாறு அமைய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. எனினும், பல சிற்றுண்டிச்சாலைகள் அந்த சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுவதில்லையென வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது , மாணவர்களின் இணை பாடவிதான செயற்பாடுகள் மற்றும் உடற்பயிற்சி முறைமைகள் குறித்தும் கல்வி அமைச்சுடன் தங்களது கருத்துக்களைப் பரிமாறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.