தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கப்போகும் அரச ஊழியர்கள்
வரவு-செலவு திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதை பொருத்தமற்ற செயற்பாடு என இலங்கை அரசாங்க உத்தியோகப்பூர்வ தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் பி.எச் பி.பஸ்நாயக்க (P. h. P. Basnayake) தெரிவிததுள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு(Gotabaya Rajapaksa) அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டும் என அரசதலைவரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரையில் சாதகமாக தீர்மானம் கிடைக்கப் பெறவில்லை.
எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழங்காவிடின் 29ஆம் திகதி முதல் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோம்.
சம்பள அதிகரிப்பு அல்லது 16000ஆயிரம் ரூபா மாத கொடுப்பனவு வழங்கலை வலியுறுத்தி அரசதலைவருக்கு கடந்த 13 ஆம் திகதி கடிதம் அனுப்பி வைத்தோம்.
தொழிற்சங்கத்தினரது கோரிக்கைக்கு அரசதலைவர் இதுவரையில் பதிலளிக்கவில்லை.
இந்நிலையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படாவிடின் 8 பிரதான அரச துறைகளில் உள்ள தொழிற்சங்கத்தினரை ஒன்றினைத்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.