மகிந்தவின் வீட்டுக்கு முன்னால் திரண்ட பொதுமக்கள்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம வீட்டுக்கு நேற்றையதினம் பல சிங்கள அரசியல்வாதிகள் உள்ளிட்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
மீண்டும் ராஜபக்சர்களின் விம்பத்தை கட்டியெழுப்ப திஸ்ஸ குட்டியாராச்சி உள்ளிட்ட தரப்பினர் குறித்த விஜயத்தில் கலந்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரத்தில் இருந்து இரண்டு மூன்று பேருந்துகளில் முன்னாள் ஜனாதிபதியை பார்ப்பதற்காக பரிசுபொருள்கள் மற்றும் உணவு பண்டங்களுடன் பலர் வருகை தந்துள்ளனர்.
நாமல் ராஜபக்ச
மகிந்தவின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டால், அவருக்கு வீடு வழங்க தலையிடுவதாக பல முன்னணி பிக்குகள் தன்னிடம் கூறியதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் சலுகைகள் குறைக்கப்பட்டதற்கு எதிராக தற்போது சில பிக்குகளால் ஒரு போராட்டம் கட்டமைக்கப்படுகிறது" என்றார்.
இதன்போது "நீங்கள் உங்கள் ஒரு மைல் தூரத்தைத் தொட்டால் கூட, மகா சங்கத்தினர் முன்வருவார்கள்" என்று சில பிக்குகள் பகிரங்கமாக இதன்போது அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த நாட்களில் மகிந்தவின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அவரைப் பார்க்க தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வருவதாகக் கூறப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணிகளின் சலுகைகளை, வீடுகள் உட்பட, அவற்றை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தில் கவனம் செலுத்தியுள்ளர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 18 மணி நேரம் முன்
