கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர்களிடையே மோதல்! துப்பாக்கியொன்றும் மீட்பு
புதிய இணைப்பு
கொழும்பு துறைமுக நகரில் ஒரு வாகனத்தைச் சோதனையிட்டதில், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு தகவல் தொடர்பு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் இரு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து மேற்படி துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பு துறைமுகக் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு துறைமுக நகரில் இரு சீனக் குழுக்களுக்கு இடையே மோதல் ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மோதலில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், மற்றொரு சீன நாட்டவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் தகவல்படி, இந்த மோதல் இன்று(23) அதிகாலை கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விரிவான விசாரணை
இந்த நிலையில், மோதலின் போது இருவர் காயமடைந்ததையடுத்து, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்தோடு, சம்பத்தில் மற்றொரு சீன நாட்டவரும் கடத்தப்பட்டிருபப்தாக கூறப்படும் நிலையில், கொழும்பு துறைமுகப் காவல்துறையினர் இது தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 21 மணி நேரம் முன்