கிழக்கில் திடீரென மூடப்படும் இறைச்சி விற்பனை நிலையங்கள்
மட்டக்களப்பு அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவு இன்று (12) முதல் ஒரு வார காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் குளிருடனான காலநிலை காரணமாக பல இடங்களில் பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகள் உயிரிழந்தமையின் காரணத்தினாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிபர் உத்தரவு

இதனை தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவிற்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகள் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிய இரசாயன பகுப்பாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் மாட்டிறைச்சி ஆட்டிறைச்சியைக் கொண்டு செல்ல உடனடித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை இடைநிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.





அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்