வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்காவிற்கு வந்த பொதி : சிக்கிய மூவர்
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கூரியர் சேவை மூலம் கொண்டு வரப்பட்ட பொதியில் 2.139 கிலோகிராம் கொக்கேய்ன் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத் தடுப்புப் பிரிவின் கட்டுநாயக்க அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொலம்பியாவின்(colombia) பொகோட்டாவிலிருந்து கனேமுல்ல பகுதியிலுள்ள முகவரிக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட இந்த பொதியில் இருந்த மின் சாதனத்தில் நூதனமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
மூவர் கைது
இதனடிப்படையில், மாளிகாவத்தை பிரதேசத்தில் சந்தேகத்தின் பேரில் 23 மற்றும் 24 வயதுடைய இருவர் மற்றும் பொதியை பெறவந்த முகவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்கேயின் கையிருப்பின் பெறுமதி
கொக்கேயின் கையிருப்பின் பெறுமதி 75 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |