உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : கர்தினாலுக்கு சஜித் அளித்த உறுதிமொழி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும்(sajith premadasa), பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (cardinal malcolm ranjith)ஆண்டகைக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (11) காலை கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்(easter attack) உயிரிழந்தவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கர்தினாலிடம் வாக்குறுதியளித்தார்.
சஜித் அளித்த வாக்குறுதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நியமிக்கப்படுகின்ற நீதிமன்ற கட்டமைப்புக்கு தாம் தோள் கொடுப்பதாகவும், நீதிமன்ற கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், இதற்காக மேற்கொள்ள வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்துவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு வாக்குறுதியளித்தார்.
பிரதான சூத்திரதாரிக்கு தகுதி தராதரம் பாராது தண்டனை
அவ்வாறே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதோடு, இதன் பிரதான சூத்திரதாரிக்கு தகுதி தராதரம் பாராது தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |