109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் முடிவுகள் வெளியாகின -புற்றுநோய் இரசாயனம் உள்ளதா?
srilanka
coconut milk
By Vasanth
சந்தையில் எழுமாறாக பெற்றுக்கொண்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றுள் புற்றுநோயை உண்டாக்கும் எவ்வித இரசாயனமும் அடங்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
இதற்கு முதல் 55 மாதிரிகளின் முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவற்றிலும் அஃப்லாடொக்சின் புற்றுநோய் இரசாயனம் அடங்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விஷ தேங்காய் எண்ணெய் அடையாளம் காணப்பட்ட பின்னர் சர்ச்சைக்குரிய நிலைமையில் அவற்றை சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதா என அறிய நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார ஆய்வாளர்கள் 125 தேங்காய் எண்ணெ மாதிரிகளை பெற்று பரிசோதனைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்