தேங்காய் விலை அதிகரிப்புக்கு தீர்வு : வெளியான அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Shalini Balachandran
அடுத்த ஆறு மாதங்களில் தேங்காய் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக சந்தையில் தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது.
அதிக விலை
பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 180 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
சில இடங்களில் தேங்காய் ஒன்று 220 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.
தென்னை ஏற்றுமதி மற்றும் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக சுமார் 100 கோடி தேங்காய் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்