வேகமாக அதிகரிக்கும் தேங்காயின் விலை - எடுக்கப்படும் நடவடிக்கை
நாட்டில் அண்மைய நாட்களில் தேங்காய் விலை வேகமாக உயர்ந்து வருவதால் மக்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தென்னை பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைக்கப்படும் என்று தெங்கு பயிர்ச்செய்கை சபை (Coconut Development Authority) தெரிவித்துள்ளது.
இவற்றில் ஒரு மில்லியன் மரங்கள் வடக்கு தென்னை முக்கோண வலயத்திற்கு அருகில் நடப்படும் என்று அதன் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
தெங்கு பயிர்ச்செய்கை சபை
அதன்படி, இந்த செயல்முறையின் முதல் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுனிமல் ஜயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.
கப்ருகா கடன் திட்டத்திற்கு இணையாக, இந்த கப்ருகா நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைப்பட்டு எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும்.
2025 ஆம் ஆண்டுக்குள் 2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட தெங்கு பயிர்ச்செய்கை சபை திட்டமிட்டுள்ளது அதன் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
தேங்காயின் சில்லறை விலை
இதேவேளை, இந்த ஆண்டு (2025) ஜனவரி மாத இறுதி வாரத்தில், 2024 ஜனவரி மாத இறுதி வாரத்துடன் ஒப்பிடும்போது, ஒரு தேங்காயின் சில்லறை விலை 88 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த நாட்களில் ஒரு பெரிய தேங்காய் ரூ.200 முதல் 250 வரையிலும், ஒரு சிறிய தேங்காய் ரூ.170 முதல் 190 வரையிலும் விற்கப்படுதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்துடன் ஒப்பிடும்போது, ஒரு தேங்காயின் மொத்த விலை சுமார் 110 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)