அநுர அரசாங்கம் கொழும்பை மையப்படுத்தி அரசியல் செய்யாது! பிமல் திட்டவட்டம்
கொழும்பை மாத்திரம் மையப்படுத்திய அரசியலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்காது என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ். ஆவரங்கால் - தொண்டைமானாறு வீதி புனரமைக்கும் வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
வடக்கு - கிழக்கு
“ எமது அரசாங்கம் இலங்கை முழுவதையும், வடக்கு கிழக்கை ஒன்றிணைத்தும் அனைத்து அபிவிருத்தி வேலை திட்டங்களையும் செய்து தருவதற்கு முன் வந்துள்ளது.

நாமல் ராஜபக்ச சஜித் பிரேமதாச போன்றோர் சிறு விடயங்களை கூட பாரதூரமாக குழப்ப முயற்சிக்கின்றனர்.
எனவே மக்கள் எமது ஆட்சியில் சரியான அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியும். அதே போல இனவாதம் பேசுவதற்கும் நமது ஆட்சியில் இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |