கனவு பலிக்காது! கோட்டாபய இல்லை என்றால் அடுத்து இவர் தான் ஜனாதிபதி - பகிரங்க அறிவிப்பு
srilanka
colombo
gotabhaya rajapaksa
basil rajapaksa
By Vasanth
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவார் எனவும் அவர் போட்டியிடவில்லை என்றால், அதற்கு தகுதியான நபர் பசில் ராஜபக்ச எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியானவர் என்பதை பொதுஜன பெரமுன என்ற வகையில் நாங்கள் தெளிவாக கூறுகின்றோம். பசில் ராஜபக்ச போட்டியிடுவதை விரும்பாதவர்கள் சேறுபூசி வருகின்றனர்.
எனினும் பொதுஜன பெரமுனவை வீழ்த்த முடியாது எனவும் சஹான் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,