ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான, வழக்கின் விசாரணைத் திகதியை நிர்ணயிப்பது குறித்து நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி சட்டமா அதிபரால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்த வழக்கு இன்று (1) பரிசீலிக்கப்பட்ட போது, பிரதிவாதியான ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பூர்வாங்க வழக்கு விசாரணை மாநாட்டை நிறைவு செய்த மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல, வழக்கின் விசாரணைத் திகதியை நிர்ணயிப்பதற்காக அதனை ஜூன் மாதம் 26ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |