முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீடு! விபரம் வெளியானது
2021ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் மறைந்த ஜனாதிபதிகளின் மனைவியர் ஆகியோருக்காக 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கான ஒதுக்கீட்டின்கீழ் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்குமான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு ஒய்வூதிய கொடுப்பனவுகளாக தலா 8.1மில்லியன் ரூபாவும் 16 மில்லியன் ரூபா கட்டிடம் மற்றும் வாகனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமாசவுக்கு 2மில்லியன் ரூபாவும் கட்டிடம் மற்றும் வாகனங்களுக்காக மேலும்; 2 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன எனினும் முன்னாள் ஜனாதிபதிகளில் மஹிந்த ராஜபக்ச தற்போது பிரதமராக இருக்கின்ற நிலையில் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
இந்தநிலையில் இவர்கள் இருவருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஒதுக்கீடுகள் பொருந்துமா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. 2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் மறைந்த ஜனாதிபதியின் மனைவிமாருக்காக வரவுசெலவுத்திட்டத்தில் 37.9 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
2019ஆம் ஆண்டு முடிந்தபின்னர் மைத்திரிபாலவும் முன்னாள் ஜனாதிபதியின்பட்டிலுக்குள் உள்ளடக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : #