கொழும்பு துறைமுக நகரத்திற்கு வாக்களித்தால் சமூகத்துக்கு செய்யும் துரோகம்!
சிறுபான்மை மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகள், கொழும்பு துறைமுக நகர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அரசுக்கு சார்பாக வாக்களித்தால் சிறுபான்மை சமூகத்துக்கு செய்யும் ஒரு பாரிய சமூகத்துரோகம் என்பதை மறந்து விடக்கூடாது என தேசிய விடுதலை மக்கள் முண்னணியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்துள்ளார்.
துறை முக நகர் தொடர்பிலான ஊடகங்களுக்கு இன்று (20)வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
விசேடமாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களே! தயவு செய்து உங்கள் தற்சமய அடைவுகளை சிந்திக்க வேண்டாம் நீங்கள் யாவரும் தன்னிறைவு பெற்றவர்களே! ஆகவே உங்களை நம்பி வாக்களித்த எம் சமூகத்தின் 20 வருடங்களுக்கு முன்னால் வர இருக்கும் சமூகத்தை பற்றி சிந்தித்து உங்கள் கைகளை உயர்த்துவதில் இருந்து தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த சீன நாட்டின் போர்ட் சிட்டி பிரவேசம் என்பது எமது சமூக சர்வதேச வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து ஒழித்துவிடும் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
நீங்கள் சரியான சமூக சிந்தனனையும் நாட்டு பற்றும் உள்ள சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து கொள்ளுங்கள்.