கொழும்பில் பற்றியெரிந்த கப்பல் திட்டமிட்ட சதி - பேராசிரியரின் கருத்தால் பரபரப்பு
colombo
burn
ship
By Jaso
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகே பற்றியெரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயானது திட்டமிட்ட சதியென்று பரபரப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பேராசிரியர் சந்திமா விஜயகுணவர்தன இதனை நேற்று சமுக வலைத்தளமொன்றில் இயங்கிவரும் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது தெரிவித்த நிலையிலேயே இந்த பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் இயற்கையாகவே தீ விபத்து ஏற்படவில்லை. வெடிக்க செய்திருக்கின்றனர். அப்படியென்றால் அதுவும் ஒரு தாக்குதலாகவே கணிக்கப்பட வேண்டும். இது திட்டமிட்ட சதி என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தீவிரவாத தாக்குதலுக்கு ஒப்பான செயற்பாடு என்பதால் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்