கொழும்பில் இன்றுமாலை இரு இடங்களில் துப்பாக்கிசூடு : இருவர் படுகாயம்
Colombo
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
கொழும்பில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வெல்லம்பிட்டி மற்றும் ரத்கம பிரதேசங்களில் இன்று மாலை இந்த துப்பாக்கி சூட்டு சம்பங்கள் இடம்பெற்றுள்ளன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டிய பிரண்டியாவத்தை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை ரத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்