இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்: ஐ.நா அவசர கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விடயம்
பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் நாட்டிற்கு தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, ஹமாஸின் இந்த கொடூர தாக்குதலுக்கு, அனைத்து (15) உறுப்பினர் நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஆனால், சில நாடுகள் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மட்டும் கண்டனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் துணை தூதுவர் ராபர்ட் வுட் இது குறித்து கூறுகையில், பெரும்பாலான சிறந்த நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தன.
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
ஆனால், சில சபைகளின் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. பொதுவாக அவர்கள் யார் என்று கூட கூற முடியும் என கூறியுள்ளார்.
அதேவேளை, ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதுவர் வாஸ்சிலி நெபன்ஜியா கூறுகையில், கூட்டத்தில் நாங்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதை சொல்ல அமெரிக்க முயற்சி செய்தது.
ஆனால், நாங்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது உண்மையல்ல அத்தோடு மக்கள் மீதான அனைத்து தாக்குதலுக்கும் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம் என்றார்.
மேலும், சீனாவுக்கான தூதர் ஹமாஸ் என்ற பெயரை உச்சரிக்காமல், பொதுமக்கள் மீதான அனைத்து தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம் என்றார். இதனால், இறுதியில் ஐ.நா. உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.