கொழும்பின் சில பகுதிகளில் நாளை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்
srilanka
colombo
By Vasanth
கொழும்பின் சில பகுதிகளில் நாளைய தினம், விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மறைந்த மகாநாயக்கர், கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியையை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, நாளை பிற்பகல் 1 மணிமுதல் 3 மணிவரையான காலப்பகுதியில், காலி வீதி, பம்பலப்பிட்டி, தும்முல்லை சந்தி, சுதந்திர மாவத்தை பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுலாக்கப்பட உள்ளது.