கொழும்பு - கோட்டை நோக்கி பயணித்த தொடருந்தில் தீப்பரவல்
Sri Lanka Railways
Fire
Accident
Railways
By Thulsi
பதுளையில் (Badulla) இருந்து கொழும்பு கோட்டை (Colombo Fort) நோக்கி பயணித்த பொடி மெனிகே தொடருந்தில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளையில் இருந்து இன்று காலை பயணிக்க ஆரம்பித்த தொடருந்தின் பின் இயந்திரத்தில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
பொடி மெனிகேவின் தொடருந்து
ஹப்புத்தளை நிலையத்திற்கு அருகில் தொடருந்தில் தீ பரவியதாகவும், தொடருந்து ஹப்புத்தளை நிலையத்திற்கு வந்த பின்னர் தீ அணைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொடி மெனிகேவின் தொடருந்து ஹப்புத்தளை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்