கொழும்பு போர்ட் சிற்றியில் பணிபுரியும் இராஜாங்க அமைச்சரின் மகன்
kandy
ajith nivard cabraal
portcity
duty
By Sumithiran
இராஜாங்க அமைச்சர் தனது மகன் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தில் பணிபுரிந்து வருவதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலே இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனது புதல்வர் சிறந்த கல்வி அறிவைக் கொண்டவர் எனவும், அவருக்கு வெளிநாடுகளில் பட்டப்படிப்புகளுக்கான சான்றிதழ்கள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது மகன் போர்ட் சிட்டியில் கடமையாற்றினால், உங்களுக்கு என்ன பிரச்சினை என அஜித் நிவாரட் கப்ரால், ஊடகவியலாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்