தியாக தீபம் திலீபனின் ஐந்தாம் நாள் உண்ணாவிரத நினைவேந்தல்!(படங்கள்)
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று (19.09.2023) செவ்வாய்கிழமை பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தலில், கலைப்பீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் சி.சிந்துஜன் நினைவுதின உரையினை முன்வைத்திருந்தார்.
பங்குபற்றுதல்களுடன்
மேலும் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் யோ.நெவில்குமார் மற்றும் வணிக மற்றும் முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் பங்குபற்றுதல்களுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஆளணியினர், ஊடகவியலாளர் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.









