சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்!
Sri Lankan Peoples
Journalists In Sri Lanka
By Dilakshan
இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை காலமானார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் தனது 81 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
இவர் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, வெளியிட்ட அறிக்கைகளுக்காக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார்.
இறுதிச் சடங்கு
ஊடகத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட இவர், பல முக்கிய செய்திகளை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இறுதிச் சடங்குகள் இன்று (13) தெஹிவளை முஸ்லிம் பள்ளிவாசல் மயானத்தில் நடைபெற உள்ளன.
அவரது உடல் இன்று காலை 9 மணி முதல் கொழும்பு ஹில்டாப், சிறிவர்தன சாலை, எண் 11/C இல் இறுதிச் சடங்குகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி