கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நாளை(18) கொழும்பிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்படி, நாளை காலை வெள்ளவத்தை(Wellawatte) தொடருந்து நிலையத்துக்கு அருகில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பால், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு எதிரான கொடூர யுத்தம் நிறைவடைந்து நாளை தினம் 15 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளன.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
இந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நாளைய தினம் நினைவுகூரவுள்ளதாக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் நினைவேந்தல்களுக்கு ஆதரவாகவும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் வகையிலும் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, வெள்ளவத்தை தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கடற்கரைக்கு, வெள்ளை மலர்களுடன் வருமாறு அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, போரில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா புத்தர் சிலைக்கு அருகாமையில் இன்று(17) மாலை ஆறு மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |