அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் 36வது ஆண்டு நினைவேந்தல்
மட்டக்களப்பு (Batticaloa) புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 36வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
புனித மரியாள் தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சமாதியில் இன்று வியாழக்கிழமை (6) உறவினர்கள் மற்றும் மக்கள் ஒன்று இணைந்து ஈகைச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
சிறிலங்கா படையினரால் மக்கள் அழிக்கப்பட்டார்கள், சுற்றிவளைப்புக்கள், கைது செய்து விசாரணையின்றி அடைத்து வைத்தல் போன்ற பல்வேறு மக்களின் துன்ப துயரங்களிற்கு துணிந்து களமிறங்கி சேவை செய்த அருட்தந்தை சந்திரா பெர்ணாண்டோ தமிழ் தேசிய விடுதலையை உள்ளுணர்வோடு நேசித்ததனால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக் கொண்டவராக காணப்பட்டார்.
தேவாலயத்தில் நினைவேந்தல்
தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் இலக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்த காலத்தில், 1987 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
அவரின் 36வது தினத்தையிட்டு மட்டக்களப்பு சர்வ மத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அன்னாரது சமாதியில் நினைவேந்தல் இடம்பெற்றது இதில் சர்வமத தலைவர்கள், வனபிதாக்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உறவினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |