மனிதாபிமான பணியாளர்களின் உயிரை பறித்த மூதூர் படுகொலை! பிரான்சில் நினைவேந்தல்
திருகோணமலை மூதூரில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தாயகம் மற்றும் பிரான்சில் இடம்பெற்றுள்ளன.
பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் உலகின் முன்னணி தொண்டு நிறுவனங்களில் ஒன்றான ஏசிப் எனப்படும் (Action contre la faim ) பட்டினிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்களால் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மூதூரில் படுகொலை செய்யப்பட்ட போர்க்குற்றத்தின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தாயகம் மற்றும் பிரான்சில் இடம்பெற்றுள்ளன.
மூதூர் படுகொலை
சிறிலங்கா அதிரடிப்படையினரால் மேற்கொள்ப்பட்ட இந்த படுகொலைகள் ஒரு போர்க்குற்றம் என பட்டினிக்கு எதிரான அமைப்பு குறிப்பிட்டுவரும் நிலையில் இந்த படுகொலைகளுக்கு இதுவரை நீதி இதுவரை வழங்கப்படாத நிலையில் இன்றைய நினைவுநாள் கடந்துள்ளது.
ஏசிஎப் நிறுவனத்தின் பணியாளர்கள் திருகோணமலை மாவட்டத்தின் மூதூரில் வைத்து கடந்த 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 4ஆம் திகதி சிறிலங்கா அதிரடிப்படையினரல் முழங்காலில் இருத்தப்பட்டு மரணதண்டனை வழங்கும் பாணியில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த படுகொலைகளுக்கு தாம் பொறுப்பில்லை என சிறிலங்கா அப்போது மறுத்திருந்தாலும், சிறிலங்கா படைத்துறையே இந்த படுகொலைகளை செய்தாக அப்போது இலங்கையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான சுவீடனைச் சேர்ந்த ஊல்ஃப் என்றிக்சன் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதேபோல் இது ஒரு போர் குற்றம் என பட்டினிக்கு எதிரான அமைப்பும் குற்றஞ்சாட்டியிருந்தது.
ஆணைக்குழு
பல உலக நாடுகளின் அழுத்தத்தை மூதூர் படுகொலைக குற்றச்சாட்டுகளை விசாரிக்கவென பல்வேறு உலக நாடுகளின் பார்வையாளர்களை உள்ளடக்கிய ஆணைக்குழு ஒன்றை அப்போதைய அரச தலைவராக மகிந்த அமைத்திருந்த நிலையில் சிறிலங்கா தரப்பே இந்த படுகொலைகளை நடத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபோதும் இந்த கொலைக்குரியவர்கள் தண்டிக்கப்படவில்லை.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பெண்கள் உட்பட 17 பேரையும் நினைவுகூரும் நிகழ்வு இன்று மாலை திருகோணமலை உவர்மலை பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் படுகொலை விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மிக நீண்டகால ஒத்துழைப்பை வழங்கிவிட்டதாகவும் இது குறித்து உள்நாட்டில் நடைபெறும் விசாரணைகள் சுயாதீனமானதாகவும் பக்கசார்பற்றதாகவும் இருக்கும் என தாம் நம்பவில்லை என பட்டினிக்கும் எதிரான நடவடிக்கை அமைப்பின் மனிதநேய செயற்பாட்டு ஆலோசகர் கூறியுள்ளார்.
இதேவேளை பிரான்சிலும் இந்த போர்க்குற்ற படுகொலை நினைவு நாள் பட்டினிக்கு எதிரான அமைப்பின் தலைமையகத்திலும் அதேபோல கிளிச்சி பகுதியில் உள்ள நினைவு இடத்திலும் இன்று பகல் நினைவுகூரப்பட்டது. கிளிச்சிப் பிராங்கோ தமிழ்சங்கத்தின் சார்பில் இந்த நினைவேந்தல் மற்றும் நீதிகோரல் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



