உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்: விடுக்கப்பட்ட அழைப்பு
நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சிப் படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு உலக தமிழர் வரலாற்று மையத்தில் மாநாடொன்று இடம்பெறவுள்ளது.
இந்த மாநாடானது எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை காலை 10.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
மேற்படி மாநாட்டை உலகத்தமிழர் வரலாற்றுமையமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கமும் ஏற்பாடு செய்துள்ளன. இந்த மாநாட்டை முன்னிட்டு வரும் ஞாயிற்றுகிழமை ஊடக சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது.
உலகத் தமிழர் வரலாற்று மையம்
இந்த ஊடக சந்திப்பானது, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை 2.00 மணி முதல் 4.00 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
உலகத் தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போர்ட்டில் (OX17 3QP) இந்த ஊடக சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து ஊடக நிறுவனத்தையும் ஊடகவியலாளர்களையும் இதில் பங்கேற்குமாறு நிகழ்வு ஏற் பாட்டு குழு கேட்டுகொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |