ஈரான் அதிரடி அறிவிப்பு - ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது - வர்த்தக கப்பல்களுக்கு அனுமதி
ஹோர்மூஸ் நீரினை அனைத்து வர்த்தக கப்பல்களுக்காகவும் திறந்து விடப்பட்டு உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
புதுடெல்லியில் பிரிக்ஸ் வெளியுறவு துறை மந்திரிகளுக்கான கூட்டத்தின் போது ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அராஜகத்திற்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் முற்றுகை
அவர் மேலும் தெரிவிக்கையில், ஹோர்மூஸ் நீரினையானது அமெரிக்க ஆக்கிரமிப்பால் அதன் முற்றுகையால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

எங்களுடைய பார்வையில், ஹோர்மூஸ் நீரினை அனைத்து வர்த்தக கப்பல்களுக்காகவும் திறந்து விடப்பட்டு உள்ளது.
ஆனால், அவர்கள் எங்களுடைய கடற்படையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நாங்கள் எந்த தடையையும் உருவாக்கவில்லை.
அமெரிக்காவின் முற்றுகையால் அது உருவானது. அமெரிக்காவால் உருவான இந்த தடுப்பு நடவடிக்கைகளை நீக்கினால், இந்த சிக்கலான நிலைமை முடிவுக்கு வரும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |