மொட்டுக் கட்சிக்குள் பிளவு! அமைச்சு பதவிக்கான போட்டி ஆரம்பம்

Parliament of Sri Lanka Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka Podujana Peramuna
By Kiruththikan May 21, 2022 08:02 AM GMT
Kiruththikan

Kiruththikan

in அரசியல்
Report

புதிய அமைச்சரவையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் கடும் போட்டி ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

இவர்கள் அரச தலைவர் மற்றும் பிரதமரை அடிக்கடி சந்தித்தும், பல்வேறு தரப்பினர் ஊடாகவும் தமக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது.

அரச தலைவர் மற்றும் பிரதமர் உட்பட அமைச்சரவையின் எண்ணிக்கையை 25 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் மீதமுள்ள 23 அமைச்சுக்களுக்கு ஏற்கனவே 13 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மொட்டுக் கட்சிக்குள் பிளவு! அமைச்சு பதவிக்கான போட்டி ஆரம்பம் | Competition For Ministerial Posts Within The Party

புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சுமார் 10 அமைச்சு பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதுடன் ஏற்கனவே அந்த கட்சியை சேர்ந்த 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

மேலும் ஐந்து அமைச்சு பொறுப்புக்கள் பொதுஜன பெரமுனவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமைச்சு பதவிகளுக்கான கோரிக்கையை விடுத்துள்ளனர். அமைச்சரவையில் தினேஷ் குணவர்தன மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு மேலதிகமாக இதர கட்சிகளுக்கு 11 அமைச்சு பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

இதர அரசியல் அணியில் அங்கம் வகிக்கும் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, விஜயதாச ராஜபக்ச, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, நளின் பெர்னாண்டோ, டிரான் அலஸ் ஆகியோர் ஏற்கனவே அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

மொட்டுக் கட்சிக்குள் பிளவு! அமைச்சு பதவிக்கான போட்டி ஆரம்பம் | Competition For Ministerial Posts Within The Party

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு மேலும் இரண்டு அமைச்சு பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மீதமுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், ராஜாங்க அமைச்சர்களும் அடுத்த வாரம் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர். ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.  

ReeCha
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026