ஆட்சிக்கு பின் நிலைப்பாடை மாற்றிய அநுர அரசு: அன்னலிங்கம் அன்னராசா ஆவேசம்
அனுர அரசு ஆட்சியை பிடித்தபின் தனது நிலைப்பாடை முழுமையாக மாற்றியுள்ளது என வடக்கின் கடற்றொழிலாளர் அமைப்பு பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா(Annalingam Annarasa) சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (16) நடைபெற்றது ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அநுர அரசு ஆட்சிக்கு வர முன்னர் நாட்டை ஊழலற்றதாக மற்றுவோம் என கூறி ஆட்சிக்கு வந்தனர்.
பாதிப்புக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள்
ஆனால் ஆட்சியை பிடித்தபின் தனது நிலைப்பாடை முழுமையாக மாற்றியுள்ளது. இது வாக்களித்த வடக்கு மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வடக்கில் இன்று பாரம்பரிய சிறு கடற்றொழிலாளர்கள் பல்வேறு வகையில் தொடர்ந்தும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர்.
அண்மையில் வடக்கின் ஆளுனர் தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்று அதில் பல தீர்மானங்கள் எடுக்கப்படுள்ளன.
இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக முறையற்ற வகையில் தகவல்களை வழங்கி கடற்றொழிலாளர்களுக்கிடயே குழப்பங்களை ஏற்படுத்தும் நடவடிக்கை நடக்கின்றது.
கடலட்டைப் பண்ணை
கடலட்டைப் பண்ணைகளை நாம் முறையான விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்டு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
எனினும், பண்ணைகளுக்காக காணிகள் அதிகாரிகளதும், அரசியல்வாதிகளதும் விருப்புக்கேற்ப வழங்கப்படுகின்றது.
நாம் வடக்கின் ஆளுனரிடம் கேட்கின்றோம், கடற்காணிகளை வழங்கும் அதிகாரத்தை உங்களுக்கு கொடுத்தது யார்? பதில் சொல்லுங்கள்.
இந்நேரம் கடலட்டைப் பண்ணைகளை அகற்றினால் நாட்டின் வருவாய் குறையும் என்று கூறியுள்ளார்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
அவ்வாறாயின் சிறு கடற்றொழில் செய்துவரும் தொழிலாளர்களின் நிலை என்ன? அவர்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் கொடுப்பது யார்? கடல்மீது உள்ள அக்கறையினால் தான் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
முறையற்ற வகையில் வழங்கப்படும் பண்ணைகளை தொடர்ந்தும் சட்டவிரோதமாக வழங்குவதை நிறுத்தாவிடின் நாம் தொழில் நடவக்கையை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவோம்.
எனவே, வடக்கின் கடற்றொழில் சமூகத்தின் கருவறுத்து ஏப்பமிடும் செயற்பாட்டை முன்னெடுப்பதை அனுர அரசும் வடக்கின் ஆளுனரும் கைவிட வேண்டும்.”என அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்