விரைவில் பூர்த்தி செய்யுங்கள் -கோட்டாபய விடுத்த பணிப்புரை
kandy
order
Gotabaya Rajapaksha
By Jaso
கண்டி – ரஜ வீதியில் அமைந்துள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அஹெலேபொல அரண்மனையின் புனரமைப்புப் பணிகளை, அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksha) இன்று (06) பார்வையிட்டார்.
பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் சிறைக்கூடமாக விளங்கி, பின்னர் விளக்கமறியல் சிறைச்சாலையாகப் பயன்படுத்தப்பட்ட இந்தக் கட்டடம், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டு, தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
வரலாற்று முக்கியத்துவமிக்க இந்தக் கட்டடத்தின் புனரமைப்புப் பணிகள் அனைத்தும், பழங்கால அரண்மனைத் திட்டத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் புனரமைப்புப் பணிகளை வெகு விரைவில் பூர்த்தி செய்யுமாறு, அரசதலைவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி