யாழ். சிறைச்சாலையில் கணினி பயிற்சி நிலையம் திறந்து வைப்பு
Jaffna
Sri Lanka
By Raghav
யாழ். சிறைச்சாலையில் சிறைக்கைதிகளின் நலன்களுக்காகவும் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் முகமாகவும் கணினி பயிற்சி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் (Jaffna) சிறைச்சாலை அத்தியட்சகர் சீனிவாசன் இந்திர குமார தலைமையில் இடம்பெற்றுள்ளது.
சிறைச்சாலைகள் புனர் வாழ்வு
சிறைச்சாலைகள் புனர் வாழ்வு பிரிவினால் கைதிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இலங்கையில் முதன் முறையாக யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலேயே இவ்வாறு கணினி பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்படுவதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்வில் கைதிகள் நலன்புரி சங்கத்தின் சிரேஷ்ட சிறையதிகாரி ஸ்ரீ மோகன் உள்ளிட்ட, சிறைச்சாலையின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்