இஸ்ரேலில் ஜேர்மன் அரச தலைவருக்கு ஏற்பட்ட நிலை
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுக்கு சென்ற ஜேர்மன் பிரதமர், ஹமாஸ் அமைப்பின் ஏவுகணை தாக்குதலில் விமான நிலையத்தில் படுக்க வைக்கப்பட்ட காட்சி எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 17ம் திகதி தலைநகர் டெல் அவிவ் இல் உள்ள விமான நிலையத்திற்கு ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் நாடு திரும்புவதற்காக வந்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல்
இதன்போது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் விமான நிலையத்தில் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
Hamas terrorist are still firing rockets from Gaza towards Israel.
— Menachem Vorchheimer (@MenachemV) October 19, 2023
These rockets are not only placing the lives of Israelis at risk, but also the lives of foreigners including German Chancellor Olaf Scholz & his team #Israel #Germany pic.twitter.com/5nUEqWJ90y
இதனால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ், பாதுகாப்பு காரணங்களுக்காக தரையில் படுக்க வைக்கப்பட்டார். பின் சில நிமிடங்களுக்கு பின்னர் அவர் விமானத்தில் ஜேர்மனிக்கு புறப்பட்டார்.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 6 மணி நேரம் முன்