பயணியின் பணத்தை ‘பிக்பொக்கட்’அடித்த நடத்துனர் சிக்கினார்
Sri Lanka Police
Colombo
Srilanka Bus
By Sumithiran
கொழும்பு மொரட்டுவை - பெட்டா பாதை 101 வழித்தடத்தில் பயணி ஒருவரின் பணப்பையை திருடிய தனியார் பேருந்தின் நடத்துனர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
பயணி ஒருவரின் பணப்பையை திருடிய போது அவர் கையும் களவுமாக பிடிபட்டதாகவும், அதனை அவதானித்த சக பயணி ஒருவர் உரிமையாளரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அவரை பயணிகள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் பயணிகளின் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கம்பஹா பகுதியைச் சேர்ந்த மொரட்டுவை நோக்கி பயணித்த பயணியே சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இதேபோன்ற சம்பவங்களில் நடத்துனருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 6 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்