சுதந்திர தினத்தன்று அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு...!
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட குறைந்தது எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நியூயோர்க், கோனி தீவில் (Coney Island) நேற்று (04-07-2026) இரவு இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த எட்டு பேரும் அவசர மருத்துவக் குழுவினரால் (EMS) மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதில் காயமடைந்த எட்டாவது நபரான 21 வயதுடைய யுவதி ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக (Critical condition) உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, புரூக்ளினில் (Brooklyn) அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை நான்காம் திகதி நள்ளிரவு வாணவேடிக்கை கொண்டாட்டங்களின் போது இரவு 10:35 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்து துப்பாக்கியுடன் கூடிய புத்தகப் பை ஒன்றை நியூயோர்க் காவல்துறை கண்டெடுத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |